
நற்பூ
அடடா !!
நட்பின் சிறப்புகள் ஆயிரம்-
நட்பின் சிறப்புகள் ஆயிரம்-
நான் கவி எழுத அதுவே காரணம் !!
நட்பு-
மனிதனின் 5 அங்குளம் இதயத்தில்
3 அங்குளம் நிறைந்தோடும் !!
நட்பு-
எனும் புத்தகத்தை வாசிக்கும் பொழுதே
நம்ழுள் புத்துணர்ச்சியும் புதுமுயற்சியும் வழிந்தோடும் !!
நட்பு-
நம் சுகமான நேரங்களில் நம்முடன் ஆனந்தமாய் விளையாடும்
நம் கனமான நேரங்களில் சற்றே ஆறுதலாய் நம்மோடு நடைபோடும்!!
நட்பு-
வெகுவாக நம்முள்ளே கலந்தோடும்
விரைவாக துன்பங்கள் கரைந்தோடும் !!
நட்பு-
இதை எண்ணி என் இதயம் என்றென்றும் கவிபாடும்
உன்னொடும் என்னொடும் என்றென்றும் உறவாடும் !!
மொத்தத்தில்
நட்பை பற்றி சொல்வதே
ஓர் சிறப்பு !!
உயிரொடு உயிர் சேர்த்து
உடலோடு கை கோர்த்து
உறவாடும் கவிதைதானே இந்நட்பு...,
தன்னை சுற்றி யாரும் இல்லை
என என்னும் பொழுதே
அன்னையாய் முதலில் கரம் நீட்டும்
பேரழகு தானே இந்நட்பு !!
இன்பத்தை உட்சமாய்..,
துன்பத்தை துட்சமாய்..
மாற்றிடுமே அழகிய நட்பு !!
சொல்லில் முடிவதா நட்பு ??
விண்ணை தொடுவதே நல்ல நட்பு !!
இமைகளில் மறையுமா நட்பு ??
இதயத்தில் தொடருமே நல்ல நட்பு !!
வார்த்தைகளில் முடியவில்லை நல்ல நட்பு ..
வாழ்க்கையிலும் முடிவதில்லை நல்ல நட்பு !!
வாழ்வில்-
நல்ல நட்பினை தேர்ந்தேடு !!
உன் வசந்தத்தை உணர்ந்திடு !!
அதனுடன் கைகோர்த்து உயர்ந்திடு !!
- இனிய நண்பன்.