Friday, December 28, 2007


கதறல்
உதடுகளை உளற வைத்து .,

இமைகளை பிளற வைத்து .,
கண்களை கதற வைத்து .,
இதயத்தை பதற வைத்து .,
நல்லுறக்கத்தை மறக்க வைத்து .,
கனவுகளை நிறைக்க வைத்து .,
உணர்வுகளை உதிக்க வைத்து .,
உயிரை உரைக்க வைத்து .,
இரவில் .....
நிம்மதியாய் உறங்குகிறாள் அவள் ....
நிம்மதியற்று உளருகிறேன் நான் .

துவக்கம்
இமைகளின் நெருக்கம் ..
கண்களின் உறக்கம் ..

கனவுகள் பிறக்கும் ..
நிம்மதி மறக்கும் ..
இல்லை கடவுளின் இறக்கம் .,
இவை அனைத்தும் -

அக்காதலின் மயக்கம் .,
அன்றோ !!
அக்காதலின் துவக்கம் .

Thursday, December 27, 2007


கண்ணீர்
அவள் என்னை முழுவதுமாய் பிரியும்
முன்னே-

உயிர் என்னை விட்டு முழுவதும் பிரியும் ...
கண்களின் வழியாக .,

கண்ணீரின் பெயரில் .

Sunday, December 23, 2007


நிலவு
அது நிலவா ??
அல்ல
என் காதலியின் நிழலா ??
ஆம் !!
பூமியின் நிலவு அவள் ..,

கற்பனை
அவளுடன் நான் உறங்கும் பொது-
அந்த வான் நிலவை பார்த்தால் ..,
வான் அழகு அங் இருக்க ..
பார் அழகு இங் இருக்க ..
அவள் மடியில் தலைசாய்க்க ..,
அவள் அன்பால் எனைத்தாக்க ..,
அவள் தரும் முத்தத்தில் மொத்தமாய்-
இறப்பேன் நான்.

சுகம்
அழகே !!
என் 5 அங்குளம் இதயத்தில் மட்டும் அல்ல ..
என் 1/2 அங்குளம் இமைகளிளும்
உன்னயே சுமக்கிறேன்.
அவள் சுமை அல்ல
-என் சுகம்.


இதயத்துடிப்பு
ஒரு நிமிடத்திற்கு என் காதலியை-
நான் 72 முறைத்தான் நினைக்கிறேன் ..,
ஆம் !!
என் இதயம் ஒரு நிமிடத்திற்கு -
72 முறைத்தானே துடிக்கின்றது ..,
உன்மையில்-
என் இதயம் எத்தனை முறை துடித்தாலும்,
அத்தனை முறையும் ...
அவளயே நாளும் நினைக்கிறேன் ..,
அவளுக்காகவே நானும் சுவாசிக்கிறேன் ..

எங்கே ??
என் கல்லறையை ..,
-கடற்கரையில் வைத்திருப்பேன்..
அவள் அலையாக இருந்திருந்தால் .,
-மரத்தடியில் வைத்திருப்பேன் ..
அவள் மரநிழலாக இருந்திருந்தால் .,
-மண்ணில் புதைத்திருப்பேன் .,
அவள் மழையாக இருந்திருந்தால் ..,
-எங்கே வைப்பது என் கல்லறையை ??
அவள் என் இதயமாக இருப்பதினால் !!

கடலின் காதல்
என்னவளே !!
நீ கடற்கரையில் செல்லும் பொது-
உன் பாதச்சுவடுகளை அலை கடத்திச்செல்வது
ஏன் தெரியுமா ?
தன் காதலியின் பாதச்சுவடுகளை-
மண் உரிமை கொள்வது பிடிக்காமல் ..,
கடல் தன் அலைகளால்-
அவற்றை தன்னுடனே எடுத்துச்செல்கிறது ..
பெண்ணே!!
அக் கடலுக்கும் உன் மீது காதல் ..,
இக் கவிக்கும் உன் மீது காதல் ..,
இயற்றிய எனக்கும் உன் மீது காதல் ..,
காதலே ஜெயம் !!

-நானும் ஓர் அலைகடலே.

Saturday, December 22, 2007


என் குறள்
அவள் கடைக்கண் பார்வையினால் அடைந்தேன் -
கல்லறை உறக்கம் .


பாவம்
காதலுக்காக பெரிதாய் கல்லறை கட்டியவன்
- ஒருவன் .,
அக்காதலுக்காக கல்லறையில் கட்டப்பட்டவர்கள்
- பலர் ..,

-பாவி.

Friday, December 21, 2007


என் மெளன ராகம்
நான் இறந்தாலும் வாழ்வேன்
-அவள் நிழலாக ..

இறைவனை நேசிக்கிறேன்

-அவள் படைப்பில்.,
வாழ்வதற்க்கும் இறப்பதற்க்கும் ஓர் அழகிய இடம்
-அவள் இதயம்.,
ஒரு கனம் வாழ்ந்தால் போதும்
-அவள் சுவாசிப்பில்.,
உறக்கம் இல்லாமல் கனவுகள் எப்படி?
- என் காதலும் அப்படி.,
அவளிடம் நான் சொல்ல விறும்பும் ஓர் கவிதை
- நன்றி.,
இவை அனைத்தும் வெறும் வார்த்தைகள் அல்ல
ஓர் மெளன ராகம் .,
என்றும் மகிழ்ச்சியோடு பாடும்

-அவள் பாதத்தில் .

-இசை அமைப்பாளன்.

Thursday, December 20, 2007


ஓர் காதல் கடிதம்
அன்புள்ள காதலி -
உனக்காக நான் எழுதும் முதல் மடல் !!

என் உயிரெ !! என் உறவே !!
வெறும் உடல் நான் இங் இருக்க .,
என் உயிரெ நீ அங் இருக்க ..,
என்றும் நீ நலமாய் இருக்க .,
என்றென்றும் இறைவனை ப்ராத்திக்கிறேன் .
அன்று கண்களில் உருவாகி-
இன்று கடிதத்தில் உறவாடி ..,
என்று கல்யாணத்தில் இனைவோம் நாம்?
திருமணம் -
நம் கனவுகள் நினைவாகும் நாள் எது !!
நம் வாழ்வில் ஒளி வீசும் நாள் அது !!
அத்திரு நாள் தேடி நான் இருக்க ..,
உன் நினைவால் வாடி நான் இருக்க ..,
உன் விடைக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன் !!

இப்படிக்கு -
உன் அன்பு காதலன்.

உன்னை பற்றி ..,
நீ எழுதும் ஒர் சிரு கவிதை ...
உன் கை எழுத்து
!!

Sunday, December 2, 2007

நீ
அவ் வானம் அழுதால் -
மண்ணில் மழை பெய்யும் !!!
என் உயிரெ நீ அழுதால் -
மண்ணில் என் உயிர் மடியும் !!!
-நான் .
கொடுமை
காதலியின் கல்லறையை அழகாய் அமைத்தது -சிலர் !!!
ஆனால் ***
காதலியால் கல்லறையை அடைந்தது - பலர் !!!
விதியின் சதியால் -
அச் சிலரின் சரித்திரம் - இன்னும் நிரந்தரம் !!!
ஆனால் ***
அப் பலரின் சரித்திரம் - காணாமல் போன சித்திரம் !!!!
அய்யோ
!!
இந்த காதலால் கல்றையிலும் இல்லைமைதியான நித்திரம் !!! .
வேற்றுமை

உலகிற்கு - எனக்கு
கதிர் ஒளி - (அவள்) விழி !!!
யாழ் நிலா - (அவள்) முகம் !!!
வசந்தம் - (அவள்) சுவாசம் !!!
சுடும் நெருப்பு- (அவள்) சிரிப்பு !!!
விடியல் - (அவள்) இமைகள் !!!
வானம் - (அவள்) சருமம் !!!
புதையல் - (அவள்) பெண்மை !!!
***
யமன் - (எனக்கு)அவள் !!!!!
-பித்தன் .
கோபம்
காதலை மறக்க- மரணமே வழி !!!
இது படைத்தவன் - செய்த விதி !!!

கடவுளை தண்டிக்க-என்ன வழி ???
மண்ணில் நான் மடியும் முன் ---

ஒன்றாவது சொல்- என் உயிர் தோழி !!!
-அப்பாவி .
ஆராய்ச்சி
காதல் இருக்கும் வரை இண்ப உலகமாய் ..,
பிரிந்த பின்னே துண்ப நரகமாய் ..,
றையும் வரை சிந்தும் கவிதைகளாய் ..,
ஆம்!!!
காதல்
உயிர் உள்ள
வரை-கவிதைகளில் ..,
இறந்த பின்
னே - கல்லறையில் ..,
-விஞ்ஞானி .

Saturday, December 1, 2007



உணர்வு
செதுக்கிய சிற்ப்பமாய் இறுந்தாலும் -
ஒதுக்க பட்ட கற்சிலை நான் ..,
கவிகள் பல எழுதினாலும் -
கிழிக்கப்பட்ட காகிதம் நான் ..,
-மனிதன் .
காதல்
கண்களில் கனவு ***
உள்ளத்தின் உறவு ***
உடலின் உணர்ச்சி ***
இவை சங்கமித்தால் ..,
அது காதல் !!!
-கவிஞன் .
கனவு
இமயம் கூட சென்று விடுவேன் !!
ஆனால் ..,
அவள் இமைளை கூட கடக்க முடியவில்லை !!
ஆம் ...
அவள் மென் பாதங்களில் இறப்பதால் ..,
-காதலன் .
என் வாழ்கை
இந்த உலகில் -
தடைகள் இன்றி பிறந்தேன் ..,
குறைகள் இன்றி வளர்ந்தேன் ..,
நட்பின் மடியில் மலர்ந்தேன் ..,
இறுந்தும் என்ன பயன் ??
அவள் முதல் பார்வையிலெயே -
என்னை முற்றிலும் இழந்தேன் !!!
-மனிதன் .
துன்பம்
முன்பு இறந்தேன் -
அவள் பிரிவில்..,.
மீண்டும் பிற
ந்தேன் -
நட்பின் மடியில் ..,
வாழ்வை உனர்ந்தேன் -
அண்ணையின் விழியில்..,
னோ மீண்டும் இறக்கிறேன் -
அவள் தந்த வலியில் !!!
மயக்கம்
காலை சேவலின் கூவல் ..,
பனி படர்ந்த பூக்கள் ..,

அப் பூ மீது காமம் கொல்லும் வன்னத்து பூச்சிகள் ..,
பல காதல் கதை சொல்லும் மரங்கள் ..,
மனம் கவரும் மலைகள் ..,
மாலையில் மெதுவாய் மறையும் கதிர் ஒளிகள் ..,
இரவோடு அசை போடும் கடல் அலைகள் ..,
வான்
மழையால் வரயப்படும் வானவில் ..,
இவை அனைத்தும் ***
அவள் புகை படத்திற்க்கு ஈடாகுமா ??
-ரசிகன் .
மோகம்
எண்ணவளின் விழி பேசும் வார்தைகளை ..,
கேட்க வேண்டும் ***

ஏதேனும் தொலைபேசி உள்ளதா ???
-ரசிகன் .
கல்லறை
சில்லறை பார்வைகளில்-
என்னை கல்லறையில் அறைந்தவள் அவள் ..,
மரணத்தில் வாடினேன் -
இறுப்பினும் ..,

அவளை பற்றி சரணத்தில் பாடினேன் ..,
என் கடைசி நொடிகளில் மட்டும் அல்ல ..,
என் கல்லறையிலும் ***

அவள் கண்ணிர் சிந்த வேண்டாம் !!!
-உயிர் .
தவம்
என்ன தவம் செய்தேன் -
அவள் பார்வை என் மீது படுவதற்கு ..,

என்ன தவம் செய்தேன் -
அவள் முச்சுகாற்றை சுவசிப்பதற்கு ..,
என்ன தவம் செய்தேன் -
அவள் மெளன வார்தைகைள கேட்பதற்கு ..,
என்ன தவம் செய்தேன் -
அவள் என் வார்த்தையை கவி என்று சொல்வதற்கு ..,
இறுதியில்-
என்ன தவம் அல்ல ..,
எத்தனை தவம்தான் செய்தேன் ???
அவள் எனக்கு கிடைப்பதற்கு !!!
-காதலன்.
என் வானில்
அவளின் நிழல்-
வண்ணம் இல்லா வானவில் ..,
அடடா !!!
அவளின் கரு
மையும் -
என்
னை கவி எழுத வைக்கிறதே..,
-ரசிகன்.

Friday, November 30, 2007

இறைவாழ்த்து
வாழ்கை சரித்திர புத்தகத்தில்- ஓர் அத்யாயம் அவள் ..,
உழைப்பின் முனையிலே-உயர்ந்து இருப்பவள் அவள் ..,
என் அன்னையாய் மட்டும் இல்லாமல்-என் அனைத்துமாய் இருப்பவள் ..,
ஆம்-
என் இறையும் அவளே ..,
தாய் வாழ்த்தே-எனக்கு இறைவாழ்த்து ..,
அவளை ப்ராத்திக்கிறேன் -இக் கவியால்..,
-பக்தன்.