Tuesday, March 8, 2011


தொலைவில் இன்று-
விரைவில் நாளை.,
என்ற ஏக்கத்துடன்..,
-நான் !!

என்னை விரலோடு அனைத்து
உதட்டோடு முத்தமிட்டு.,
இளைப்பாற எரித்துவிடின்..,
என்னுடனே-
சத்தமின்றி புகையும் இன்றி.,
மொத்தமாக உன்னையும்
பகையாற எரிப்பேன்
- புகையிலை பூஞ்சுருள்.
உண்மை


தன் அளவுக்கு அதிகமான அன்பை எதிர்பார்ப்பவர்கள்
- ஆண்கள் !!
அன்பின் அளவே அதிகமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள்
- பெண்கள் !!


ஒளி

நாம் பிறர் மீது வைக்கும் நம்பிக்கையின் உச்சம்-ஆத்திகம்
நமது தன்னம்பிக்கையின் உச்சம் - நாத்திகம் !!
நம் மனிதநேயத்தின் முத்தம் -  ஆன்மீகம்!!
நமது ஆனந்தத்தின் மிச்சம் - தியானம் !!