Monday, September 8, 2008


குமுறல்
இதயம் படைக்கப்பட்ட மனிதனாய் பிறந்தேன் ..,
சமயம் சபிக்கப்பட்ட காதலில் விழுந்தேன் ..,
இவ்விதிக்கப்பட்ட வாழ்வை பிறக்கும் போதே
உணர்ந்திருந்தால்
இறந்தே பிறந்திருப்பேன் நான் !!
இறந்தே பிறந்திருப்பேன் நான் !!

ஏமாற்றம்
காதல் என் வாழ்வின் முன்னுரை என
நினைத்திருந்தேன்
ஆனால் அதுவோ -
என் வாழ்வின் முடிவுரை ஆயிற்றே !!

உன் மெல்லிய விழியால் ..,
அவை பேசிய மொழியால் ..,
அம்மயக்கத்தின் மழையால் ..,
இக்காதலின் பிழையால் ..,
அது தந்த வலியால் ..,
மரண உறக்கம் அடைந்தேணடி -
நான்
மரண உறக்கம் அடைந்தேனடி.

காதல் முழக்கம்
பெண்னே !!
உயிரோடு என்னை சிலுவையில் ஏற்றத்தான்
-நீ அழகிய உருவம் படைத்தாயோ ??
கடலோடு என்னை கடத்திச்செல்லத்தான்
-நீ கடலில் ஏழுந்தாயோ ??
இரவில் உறக்கம் இழந்த என்னை
-நீ காதல் முழக்கமிட செய்தாயோ ??
உன்னால் மயக்கம் அடைந்த என்னை
-நீ மறந்துவிட்டு செல்வாயோ ??
நம் காதல் மனவறையில் என்னை
-நீ மறுத்துவிட்டு போவாயோ ??
அப்படியென்றால் ....,
பெண்ணே !!
உயிரோடு என்னை சிலுவையில் ஏற்றத்தான்
-நீ அழகிய உருவம் ஏடுத்தாயோ ??

Monday, April 7, 2008


மாயம்
முன்னூறு நாட்கள் நிம்மதியாய் வாழ்ந்தேன் -

தாயின் கருவறையில் ..,
அவள்-
முதல் பார்வையில் முழுவதும் மாய்ந்தேன்-
மண்ணின் கல்லறையில்.

வேடிக்கை
காதலில் வெற்றி அடைந்தால்-

சுகமான மணவறை கனவன்..,
அன்றோ !!
காதலில் தோல்வி அடைந்தால்-
சுமையான கல்லறை கவிஞன்.

வாழ வல்லமை தாராயோ ..,
வாழ்வில் வசந்தம் தாராயோ ..,
வாழ்ந்தே மயக்கம் தாராயோ ..,
என்றேன்.
அவளோ-
மடையா !!என்னை மறப்பாயோ ..,
மண்ணில் நீயும் மறைவாயோ ..,
என்னை விட்டு தொலைவாயோ ..
என்றாள்.
செய்வதரியாது திகைத்தேன் நான் -
அன் நொடியே வாழ்வை தொலைத்தேன் நான்.

ஜென்மம் பல எடுப்பேன் -
அவள் நிழலாய் இருப்பேன் -
அவளோடு வாழ துடிப்பேன் -
அவள் இன்றி வாழ மறுப்பேன் -
அவள் பிரிந்தால் ..,
மீண்டும் நான் இறப்பேன்.

வெறுப்பு
விருப்பம் அற்ற அவள் பார்வையால்-
வாழ்வை வெறுத்து போணேண்
நான்.,

இறக்கம் அற்ற அவள் செயலால்-
வாழ்வில் இறந்து போணேண்
நான்.
பெரும் படை எதற்கு?
பெண்ணே ...
உன் சிலை போதும்  -
எனை சிறை எடுக்க..,

Saturday, January 12, 2008


கல்லறை காவியம்
காதல் கனவுகள் ...என்
கண்களின் செலவுகள் ..அவை

கல்லறையின் வரவுகள் ...

இன்றோ !!
கல்லறை தரையினிலே.,

கண்களின் கரையினிலே .,
நாலும்-என்
கண்ணீரீன் அரங்கேற்றம்.