Friday, December 28, 2007


கதறல்
உதடுகளை உளற வைத்து .,

இமைகளை பிளற வைத்து .,
கண்களை கதற வைத்து .,
இதயத்தை பதற வைத்து .,
நல்லுறக்கத்தை மறக்க வைத்து .,
கனவுகளை நிறைக்க வைத்து .,
உணர்வுகளை உதிக்க வைத்து .,
உயிரை உரைக்க வைத்து .,
இரவில் .....
நிம்மதியாய் உறங்குகிறாள் அவள் ....
நிம்மதியற்று உளருகிறேன் நான் .

துவக்கம்
இமைகளின் நெருக்கம் ..
கண்களின் உறக்கம் ..

கனவுகள் பிறக்கும் ..
நிம்மதி மறக்கும் ..
இல்லை கடவுளின் இறக்கம் .,
இவை அனைத்தும் -

அக்காதலின் மயக்கம் .,
அன்றோ !!
அக்காதலின் துவக்கம் .

Thursday, December 27, 2007


கண்ணீர்
அவள் என்னை முழுவதுமாய் பிரியும்
முன்னே-

உயிர் என்னை விட்டு முழுவதும் பிரியும் ...
கண்களின் வழியாக .,

கண்ணீரின் பெயரில் .

Sunday, December 23, 2007


நிலவு
அது நிலவா ??
அல்ல
என் காதலியின் நிழலா ??
ஆம் !!
பூமியின் நிலவு அவள் ..,

கற்பனை
அவளுடன் நான் உறங்கும் பொது-
அந்த வான் நிலவை பார்த்தால் ..,
வான் அழகு அங் இருக்க ..
பார் அழகு இங் இருக்க ..
அவள் மடியில் தலைசாய்க்க ..,
அவள் அன்பால் எனைத்தாக்க ..,
அவள் தரும் முத்தத்தில் மொத்தமாய்-
இறப்பேன் நான்.

சுகம்
அழகே !!
என் 5 அங்குளம் இதயத்தில் மட்டும் அல்ல ..
என் 1/2 அங்குளம் இமைகளிளும்
உன்னயே சுமக்கிறேன்.
அவள் சுமை அல்ல
-என் சுகம்.


இதயத்துடிப்பு
ஒரு நிமிடத்திற்கு என் காதலியை-
நான் 72 முறைத்தான் நினைக்கிறேன் ..,
ஆம் !!
என் இதயம் ஒரு நிமிடத்திற்கு -
72 முறைத்தானே துடிக்கின்றது ..,
உன்மையில்-
என் இதயம் எத்தனை முறை துடித்தாலும்,
அத்தனை முறையும் ...
அவளயே நாளும் நினைக்கிறேன் ..,
அவளுக்காகவே நானும் சுவாசிக்கிறேன் ..